பிரான்சின் சில பகுதிகளில் பெய்த கடுமையான ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், மின்கம்பிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஆர்டெஷ் (Ardèche) பகுதி இந்த மோசமான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு பந்து அளவிலான ஆலங்கட்டிகள் பெய்ததாக அதிகாரிகள்…
பிரான்சின் சில பகுதிகளில் பெய்த கடுமையான ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், மின்கம்பிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஆர்டெஷ் (Ardèche) பகுதி இந்த மோசமான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு பந்து அளவிலான ஆலங்கட்டிகள் பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.ஆலங்கட்டி மழையால் மின்கம்பிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 600 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆர்டெஷ் பகுதியில் உள்ள பல திராட்சைத் தோட்டங்களும் ஆலங்கட்டி மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சேத மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

