ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னோடியாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் மசோதாவை பிரான்ஸ் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றவுள்ளது. குழந்தைகளின் மனநலத்தைப் பாதுகாக்க அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்து…

ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னோடியாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் மசோதாவை பிரான்ஸ் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றவுள்ளது.

குழந்தைகளின் மனநலத்தைப் பாதுகாக்க அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், ஐரோப்பாவில் டிஜிட்டல் வயது வரம்பை நிர்ணயித்த முதல் நாடாகப் பிரான்ஸ் உருவெடுக்கிறது.

காலக்கெடு: செப்டம்பர் 1 முதல் புதிய கணக்குகளைத் தொடங்க தடை விதிக்கப்படும்; தற்போதுள்ள கணக்குகளுக்கு 2027 ஜனவரி முதல் தடை அமலாகும். பள்ளிகளில் தடை: இரண்டாம் நிலைப் பள்ளிகளில் கைப்பேசி (Mobile phone) பயன்பாடும் தடை செய்யப்படவுள்ளது. பாதிப்புகள்: டிக்டோக், ஸ்னாப்சாட் போன்ற செயலிகளால் இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாப் பெண்களுக்கு, சுயமரியாதை குறைவது மற்றும் ஆபத்தான பழக்கவழக்கங்கள் அதிகரிப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய அளவில் வயது சரிபார்ப்பு முறைகள் மற்றும் சவால்களைக் கடந்து இந்தச் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இத்தகைய தடைகளைக் கொண்டுவந்துள்ள நிலையில், பிரான்சின் இந்த அதிரடி நடவடிக்கை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.