மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் பிறந்த நாளன்று தனது தந்தையை கொலை செய்த மகன் தொடர்பில் செய்தி பதிவாகியுள்ளது. அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே இவ்வாறு தனது பிறந்த நாள் தினத்தன்று மகனின் தாக்குதலால் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுப் பழக்கத்திற்கு…
மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் பிறந்த நாளன்று தனது தந்தையை கொலை செய்த மகன் தொடர்பில் செய்தி பதிவாகியுள்ளது.
அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே இவ்வாறு தனது பிறந்த நாள் தினத்தன்று மகனின் தாக்குதலால் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

