ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (14)…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கோரிக்கை
இதன்போது, பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரி, நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு தெரிவித்தார்.
இதனை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபாய் மேலதிக சரீரப் பிணையின் அடிப்படையில் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டதுடன், பிரசன்ன ரணதுங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.

