பிரித்தானிய ஸ்டீல் நிறுவனத்தைப் பிரித்தானிய அரசாங்கம் அரசுடைமையாக்கிய நடவடிக்கையைத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் தனது நாட்டின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.…

பிரித்தானிய ஸ்டீல் நிறுவனத்தைப் பிரித்தானிய அரசாங்கம் அரசுடைமையாக்கிய நடவடிக்கையைத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் தனது நாட்டின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் நட்டமடைந்து வந்த பிரித்தானிய ஸ்டீல் நிறுவனம், சீனாவின் தனியார் எஃகு உற்பத்தி நிறுவனமான 'ஜிங்யே' குழுமத்திற்குச் சொந்தமாக இருந்தது.அரசாங்கத்தின் நம்பகத்தன்மை எனினும், தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, பிரித்தானிய அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை அந்த நிறுவனத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அரசுடைமையாக்கியது. இந்த விவகாரம் சீனாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சு, "பிரித்தானியா இந்த விடயத்தைக் கையாளும் விதம், பிரித்தானியாவின் முதலீட்டுச் சூழல் மீது சீன முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், பிரித்தானிய அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து சீனப் பொதுமக்கள் மத்தியில் எழும் கருத்துருவாக்கத்தையும் நேரடியாகப் பாதிக்கும்" எனத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், நட்டஈடு வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சுமுகமான தீர்வை பிரித்தானியா காண வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய ஸ்டீல் நிறுவனத்தில் தாங்கள் செய்த முதலீட்டின் மூலம் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பிரித்தானிய அரசாங்கம் தங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என ஜிங்யே ஸ்டீல் நிறுவனம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.