கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்று(16.07.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட யுவதி அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிறுவனம…
கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்று(16.07.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட யுவதி அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த பெருமளவு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவருடைய தந்தை ஹெரோயின் போதைப்பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

