போதைப் பணத்தில் குவித்த சொத்துகளுக்கு வேட்டை! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join திடீரென பெருமளவு சொத்துகளை குவித்தவர்கள் அல்லது சட்டபூர்வ வருமானம் இன்றி ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு…
போதைப் பணத்தில் குவித்த சொத்துகளுக்கு வேட்டை!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
திடீரென பெருமளவு சொத்துகளை குவித்தவர்கள் அல்லது சட்டபூர்வ வருமானம் இன்றி ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட சொத்துகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் சொத்துகளை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ள பொலிஸார், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

