கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ள…

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரான ஆடவரிடமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இவர்கள் ‘மொதர மயூர’ என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளிகளாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தத் தம்பதியினர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பை தொடர்வதாகவும், அதற்கான செலவுகளை சமாளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான பெண் மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரான ஆடவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.