5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே…
5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.ஆயுள் தண்டனை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தனர். இதேவேளை, அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.

