பொத்துவில்-அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -அம்பாறை நிருபர்- பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பொத்துவில்-அக்கரைப்பற்று பிரதான வீதியின், ஊரணி சந்திக்…
பொத்துவில்-அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
-அம்பாறை நிருபர்-
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பொத்துவில்-அக்கரைப்பற்று பிரதான வீதியின், ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில், வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.
காரைதீவு பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டு ஜெயநாதன் (வயது 55) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தையில் உணவு தயாரித்து கொடுத்து விட்டு, வீடு திரும்பிய வேளை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன், ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது, எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகம் காரணமாக இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி வீதியில் கவிழ்ந்துள்ளன.
இவ்விபத்தின் போது இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வேன் சாரதியும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்தனர்.
விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் கூடிய பிரதேச மக்கள், காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், வேன் சாரதியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தமையினால், அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கல்முனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவ்வாறு கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, தொடர்ந்து பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விபத்துத் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

