பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பாவனை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மகும்புரை பல் நிலை போக்குவரத்து மையத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிச…
பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பாவனை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
மகும்புரை பல் நிலை போக்குவரத்து மையத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்து சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகளை குறைத்து, பொதுப் போக்குவரத்து சேவையில் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சின் வீதி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் இந்த பரிசோதனையை நடத்தியது.
இந்த நடவடிக்கையின் போது சுமார் 150 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் நான்கு சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப் போக்குவரத்து சேவையில் போதைப்பொருள் பாவனையை முற்றிலுமாக ஒழித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்படும் சாரதிகள் மீது நிறுவன ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுவதுடன், நாட்டின் பொதுச் சட்டங்களின் கீழும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை உருவாக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

