புகையிலை கலந்த வெற்றிலை விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வது மற…
புகையிலை கலந்த வெற்றிலை விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு எதிராக சட்ட அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அச்சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத் தெரிவிக்கையில், இலங்கையில் பதிவாகும் புற்றுநோய்களில் வாய் புற்றுநோய் அதிகளவில் காணப்படுவதாகவும், புகையிலை கலந்த வெற்றிலையை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய சட்டங்களின் கீழ், புகையிலை கலந்த வெற்றிலைச் சுருள்களை வணிக ரீதியாக விற்பனை செய்தல், விநியோகித்தல், கையிருப்பில் வைத்திருத்தல் அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் ஆகியவை சட்டவிரோதமான செயல்களாகும்.
எனவே, வர்த்தகர்களும் பொதுமக்களும் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

