அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளார். ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஈரானிய தீவுகள் மற்றும் தெற்கு நகரங்களை இலக்காகக…
அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளார்.
ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஈரானிய தீவுகள் மற்றும் தெற்கு நகரங்களை இலக்காகக் கொண்டு வொஷிங்டன் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், ஐ.நா சாசனத்தை மிக மோசமாக மீறும் செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இரவானி, "அமெரிக்கா தனது கடப்பாடுகளைத் தொடர்ந்து மீறினால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்ற ஈரான் கடமைப்பட்டிருக்காது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா தனது நிபந்தனைகளை முழுமையாகவும் நேர்மையாகவும் பின்பற்றினால் மட்டுமே, ஈரான் தனது தரப்பு உடன்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தயாராக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

