உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியர் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனால், ஆர்ஜென்டினா கால்பந்து அணி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க சர்வதேச கால்பந்து கூட்டமைப்ப…

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியர் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதனால், ஆர்ஜென்டினா கால்பந்து அணி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டாவில் இடம்பெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், தாமஸ் டுச்சலின் தலைமையிலான இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மைதானத்தை அலங்கரித்த பதாகை

இந்த போட்டி முடிந்ததும், அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சன் ஆர்ஜென்டினாஸ்" (மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை) என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி மைதானத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபோக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டினா தங்களுக்குச் சொந்தமானது எனக் கோரி வரும் நிலையில், இந்த தீவுகளை ஆர்ஜென்டினாவில் "மால்வினாஸ்" என்று அழைக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் FIFA உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

FIFA -க்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானிய

இது குறித்துப் பேசிய பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர்,

“ உலகக் கிண்ணம் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபோக்லாந்து தீவுகள் எப்போதும் நமக்குத்தான் சொந்தம். இதில் எங்கள் அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையாது" என உறுதியளித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டும் இதே போன்றதொரு பதாகையை ஏந்தியதற்காக ஆர்ஜென்டினா கால்பந்து சங்கத்துக்கு FIFA அபராதம் விதித்திருந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து ஆர்ஜென்டினா நீக்கப்படாது என்றாலும், இந்த அரசியல் ரீதியான செயல்பாட்டிற்காக வீரர்கள் அல்லது கால்பந்து சங்கத்துக்கு FIFA அபராதம் அல்லது தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.