இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பானது, கடற்படைத் தளபதி தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் நடத்திய முதலாவத…

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பானது, கடற்படைத் தளபதி தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் நடத்திய முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாகும்.நினைவுப் பரிசு அதற்கமைய, பாரம்பரியங்களுக்கு அமைவாக இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.