இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவை சந்தித்துக் கலந்துரையாடினார்.குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(20.7.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக் கடற்படை…
இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவை சந்தித்துக் கலந்துரையாடினார்.குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(20.7.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக் கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.நினைவுப் பரிசு இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் நினைவாக, கடற்படைத் தளபதியால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடற்படை சார் விடயங்கள் குறித்து சுருக்கமாகக் கலந்துரையாடினர்.

