சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகய ஹொரன அமைப்பாளர் சரித வசந்த குமார அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை விமான நிலையப் பணிப்பாளர் வருஷஹென்னடிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை ஜூலை 28 வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிபதி அ…
சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகய ஹொரன அமைப்பாளர் சரித வசந்த குமார அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை விமான நிலையப் பணிப்பாளர் வருஷஹென்னடிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை ஜூலை 28 வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ். போதரகம, வௌ்ளிக்கிழமை (17) அன்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு உதவி செய்வதற்கு ஈடாக, சந்தேக நபர்கள் அவரது மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானது.
இரண்டாவது சந்தேக நபரின் வழக்கறிஞர் ஏற்கனவே பிணை கோரி எழுத்துப்பூர்வமான மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) தனது அவதானிப்புகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், முதல் மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான பிணை மனுக்கள் இன்னும் தங்களுக்கு வழங்கப்படாததாலும், அந்த மனுக்கள் தொடர்பான தனது ஆட்சேபனைகளையும் நிலைப்பாட்டையும் சமர்ப்பிக்க இயலவில்லை என்றும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அதன்படி, முதல் மற்றும் மூன்றாவது சந்தேக நபர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்பான தனது எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளையும் நிலைப்பாட்டையும் ஜூலை 23 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு சியாபோக்கிற்கு (CIABOC) நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மூன்று சந்தேக நபர்களையும் ஜூலை 28 ஆம் திதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார், அத்துடன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை வழங்குவதற்கான திகதியையும் நிர்ணயித்தார்.

