கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (20) மாலை 4:45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவிருந்த 1164 இலக்கமுடைய ரயில், மேடையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாலை 4:…
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (20) மாலை 4:45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவிருந்த 1164 இலக்கமுடைய ரயில், மேடையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாலை 4:35 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
ரயிலின் ஒரு பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகியதால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகள் மறிக்கப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த ரயில் கடந்த ஜூலை 7-ஆம் திகதியும் தடம் புரண்டிருந்தது. ஒரே ரயிலுக்குள் ஒரு மாத கால இடைவெளியில் இருமுறை விபத்து ஏற்பட்டுள்ளமை பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் குறித்த ரயில் தடம் புரளும் இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

