கொழும்பு புறகோட்டை ரயில் நிலையத்திலிருந்து ரம்புக்கனை நோக்கி செவ்வாய்க்கிழமை (07) மாலை 4.45 மணிக்கு புறப்படவிருந்த ரயில், மாலை 4.50 மணியளவில் நடைமேடைக்கு வரும்போது தடம் புரண்டது. இந்த விபத்தின் காரணமாக கொழும்பு புறகோட்டை ரயில் நிலையத்தின் நான்கு நடைமேடைகள் முடங்கியுள்ளன, இது வழம…
கொழும்பு புறகோட்டை ரயில் நிலையத்திலிருந்து ரம்புக்கனை நோக்கி செவ்வாய்க்கிழமை (07) மாலை 4.45 மணிக்கு புறப்படவிருந்த ரயில், மாலை 4.50 மணியளவில் நடைமேடைக்கு வரும்போது தடம் புரண்டது.
இந்த விபத்தின் காரணமாக கொழும்பு புறகோட்டை ரயில் நிலையத்தின் நான்கு நடைமேடைகள் முடங்கியுள்ளன, இது வழமையான ரயில் சேவைகளில் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தை சீரமைத்து, சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட வேண்டிய பல ரயில்கள் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

