இந்திய ரயில்வே நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (Nandigram Express) ரயிலின் முதல் வகுப்பு (1st AC) குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில், பூக்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 6 அன்று, ரயில் எண் 11002 நந்தி…

இந்திய ரயில்வே நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (Nandigram Express) ரயிலின் முதல் வகுப்பு (1st AC) குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில், பூக்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 6 அன்று, ரயில் எண் 11002 நந்திகிராம் எக்ஸ்பிரஸில் இந்த சம்பவம் நடந்தது, அங்கு முதல் ஏசி கூபே பலூன்கள், ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்கள் மற்றும் "ஐ லவ் யூ" செய்தியால் அலங்கரிக்கப்பட்டது

இது தொடர்பில் இந்திய ரயில்வே 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ரயில்வே மண்டலம் கூறியிருப்பதாவது,இந்தியர்களின் முட்டாள்தனம் "ஜூலை 6, 2026 அன்று 'நந்திகிராம் எக்ஸ்பிரஸ்' (வண்டி எண் 11002) ரயிலில் பயணித்த தம்பதியினர், தங்கள் 'முதல் வகுப்பு ஏசி' (1st AC) பெட்டியை அலங்கரிப்பதற்காக இணையம் வழியாக ஒரு அலங்காரப் பணியாளரைத் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜால்னா நிலையத்தில் அந்தப் பணியாளர் ரயில் பெட்டிக்குள் நுழைந்தது உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட செயலாகும். இது பாதுகாப்பில் ஏற்பட்ட தீவிரமான குறைபாடாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; மேலும், விரிவான துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், "இந்தியர்களின் முட்டாள்தனம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ரயில் என்பது பொதுச்சொத்து, இதைப் புரிந்துகொள்ளும் பொது அறிவு கூட பலருக்கு இல்லை. சம்பந்தப்பட்ட தம்பதியினர் மற்றும் அலங்காரப் பணியாளர் மீது கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.