நீர்கொழும்பு, கட்டுவ, புனித செபஸ்தியன் வீதியில் உள்ள ரயில் கடவையில், திங்கட்கிழமை (13) பிற்பகல் 2:00 மணியளவில் ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இல…
நீர்கொழும்பு, கட்டுவ, புனித செபஸ்தியன் வீதியில் உள்ள ரயில் கடவையில், திங்கட்கிழமை (13) பிற்பகல் 2:00 மணியளவில் ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லொறியின் சாரதி, அவரது உதவியாளர் மற்றும் லொறிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

