ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு கூட்டங்களின் முடிவில், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்ட…
ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு கூட்டங்களின் முடிவில், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பைத் தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகரித்துள்ளது.
இந்த முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருந்தாலும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக சிக்கல்கள் முற்றாகத் தீர்க்கப்படும் வரை மற்றும் தேர்தல்கள் நடைபெறும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டங்களில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
குறிப்பாக, தேர்தல்களை "முடிந்தவரை விரைவில்" நடத்த வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நிர்வாகக் குளறுபடிகள் நீங்கி, முறைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

