அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக வ…

அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸாரால் இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அச்சுறுத்தல்இதன் போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டியமை, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 முதல் 4 பேர் வரை பயணித்தமை, பிரதான வீதியை மறித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், குறித்த கும்பல் ஏனைய வாகனங்கள் செல்லும் பிரதான வீதியை மறித்து, ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.இந்தக் காணொளியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப் பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர். எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.