சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி அலைவரிசையான சி.எஸ்.என், புதிய பெயரில் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வன் யோஷித ராஜபக்சவுக்குச் சொந்தமான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையாகும். அத்துடன் சி.எஸ்.என்-இன் அலைவர…

சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி அலைவரிசையான சி.எஸ்.என், புதிய பெயரில் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வன் யோஷித ராஜபக்சவுக்குச் சொந்தமான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையாகும்.

அத்துடன் சி.எஸ்.என்-இன் அலைவரிசைக்கான அனுமதிப் பத்திரம் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்டவின் பெயரிலேயே இன்னும் உள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தற்போதைக்கு குறித்த அலைவரிசையின் பிரதம நிர்வாக அதிகாரியாக கலாநிதி செனேஷ் பண்டார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மிக முக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

சுமார் ஓராண்டு காலம் தேசிய தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்த அவ ர்தொழிற்சங்கங்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று தெரிவித்து, அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவர் தற்போது கலாசார அமைச்சின் கீழ் செயற்படும் அரச திரைப்பட உபகுழுவின் தலைவர் பதவியை வகிக்கிறார். அத்துடன் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.