ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார். ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று(19) நடாத்தப்பட…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று(19) நடாத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். ஜனநாயகக் கட்டமைப்பானது சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.அநுர அரசு

"நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கே ஜனநாயகம் வலுப்பெறும். வரலாற்றில் மாக்னா கார்ட்டா முதல் நவீன கால சர்வதேச இணக்கப்பாடுகள் வரை நீதித்துறையின் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று உயர்மட்ட நீதித்துறை நியமனங்களைக் கூடச் செய்யாமல் அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கின்றது.மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழலை அரசு உருவாக்கி வருகின்றது. திசைகாட்டி அரசு மக்கள் ஆணையை அவமதிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், "ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது.அழைப்பு இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கம், நிறம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அரசின் இத்தகைய போக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தகச் சலுகைகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய முயற்சிகளையும் மக்கள் சக்தியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.