நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து முன்னணி சர்வதேச ஊடகங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. 1914 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொள்ளளவை விட அதிக கைதிகள் அடைத்து வைத்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து முன்னணி சர்வதேச ஊடகங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.
1914 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொள்ளளவை விட அதிக கைதிகள் அடைத்து வைத்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறைச்சாலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களை மையமாகக் கொண்ட இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே வன்முறைக்குக் காரணம் என சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடுஇராணுவத்தினர் நிலைமையை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சித்துள்ளனர். எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஏழு பேர் உட்பட சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபிசி செய்திச் சேவை இது குறித்து செய்தி வெளியிடுகையில், 2 நாட்களாக நீடித்த இந்த வன்முறை, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே தொடங்கிய மோதல், பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பிச் செல்ல முயற்சிப்பதிலும், பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி நடத்திய போராட்டத்திலும் முடிவடைந்தாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நெருக்கடியான நிலைஅல் ஜசீரா செய்திச் சேவை தனது செய்தியில், இந்தச் சம்பவத்தின் மனிதாபிமானப் பக்கத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான நிலையையும் முன்னிலைப்படுத்தியது. நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் புஷ்பா கமல்கேவை மேற்கோள் காட்டி, காயமடைந்த கைதிகள் பொலிஸ் பேருந்துகளில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதையும், சடலங்கள் பொறுப்பேற்கப்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் தனது அறிக்கையில், கொழும்புக்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த நிலைமை, பல தசாப்தங்களில் பதிவான மிக மோசமான வன்முறைச் செயல் என வலியுறுத்தியது.
பிரித்தானியாவின் கார்டியன், பாகிஸ்தானின் டான் மற்றும் இந்தியாவின் WION மற்றும் NDTV போன்ற ஊடகங்களும் வன்முறையின் தீவிரத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தின.

