அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றிய ஷம்யா தர்ஷனி (வயது 33) என்ற பெண் வைத்தியரின் சடலம், தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து 2026 ஜூன் 17 அன்று மீட்கப்பட்டது. இந்த வைத்தியர், வெலிகம, குருந்துகொடு…
அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றிய ஷம்யா தர்ஷனி (வயது 33) என்ற பெண் வைத்தியரின் சடலம், தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து 2026 ஜூன் 17 அன்று மீட்கப்பட்டது. இந்த வைத்தியர், வெலிகம, குருந்துகொடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
தெல்தெனிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பூட்டப்பட்டிருந்த கார் ஒன்று சோதனையிடப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான மென்பொருள் பொறியியலாளர், தனது மனைவியுடன் சேர்ந்து 2026 ஜூன் 24 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி தவிர, அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணைகளின் போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி என மொத்தம் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சந்தேகநபர்கள் முதன்முதலாக 2026 ஜூன் 26 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர், ஜூலை 09 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களது விளக்கமறியல் காலம் ஜூலை 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இந்த வழக்கு, நுவரெலியா நீதிவான் புத்திகா தர்மதாச முன்னிலையில், வியாழக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது. வியாழக்கிழமை (16) அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. சூம் தொழிநுட்பம் ஊடாகவே வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விபரங்கள்
அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக (Physiotherapist) கடமையாற்றி வந்த இவர், வெளிநாடு செல்ல உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்து கடந்த ஜூன் 11ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண், தனது காதலர் என நம்பப்படும் நபர் ஒருவருடன் அண்மையில் நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அந்த நபர் பெண்ணை தூக்கிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கண்டி, கன்னொருவ பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பெண் வங்கி விபரம் (வங்கி கடன்) மூலம் பெற்ற 15 மில்லியன் ரூபாய் தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திருப்பங்களுக்கு மத்தியிலும், பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், விசாரணைகள் தொடர்வதால் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

