கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன மொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர…
கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன மொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல்,வெளியாகியுள்ளது.கிழக்கில் விநியோகம் குறித்த ஆடம்பர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்று தயாரிக்கப்பட்டு லேபிள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், உற்பத்தி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போலி மதுபானங்கள் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாண மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதேவேவெளை மட்டக்களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 25 மதுபான விற்பனை நிலையங்களுக்கு இந்த போலி மதுபானங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரும், மதுபானங்களை ஏற்றிச் சென்ற லொறியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

