கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரையம்பதி பகுதிக்கு காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடி தோணியில் கசிப்பை கடத்திச் செல்ல முயன்ற 60 வயதுடைய ஒருவரை, 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் நேற்றையதினம் (10) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரையம்பதி பகுதிக்கு காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடி தோணியில் கசிப்பை கடத்திச் செல்ல முயன்ற 60 வயதுடைய ஒருவரை, 150 லீற்றர்  சட்டவிரோத மதுபானத்துடன் நேற்றையதினம் (10) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ஒருவர் கைது இந்த நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிகாலை சுமார் 4.00 மணியளவில் காஞ்சிரம்குடா வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மீன்பிடி தோணியில் கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட 150 லீற்றர் கசிப்பை பொலிஸார் கைப்பற்றினர்.

மேலும், ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், கசிப்பு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி தோணியையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.