வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கித்துல்கலை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளருக்கு, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட 38 குற்றச்சாட்டுகளின்…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
கித்துல்கலை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளருக்கு, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட 38 குற்றச்சாட்டுகளின் கீழ் 21 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மூன்று மாதங்களுக்குள் மூன்று சம தவணைகளாக செலுத்துமாறும், முதல் தவணையை ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நகைக்கடையில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடல் உறுப்புகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன், அவை அனுமதியின்றி கையிருப்பிலும் வைக்கப்பட்டிருந்தமை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக கடந்த ஜூன் 24ஆம் திகதி ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வடமேற்கு மாகாண வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் புளத்கொஹுபிட்டிய வனஜீவராசிகள் சரக அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

