அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற முயற்சிக்கும் நிலையில், அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற முயற்சிக்கும் நிலையில், அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், செல்வந்த நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை உள்ள போதிலும், மக்கள் கட்டாயமாக வறுமைச் சுமையை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதிகரிக்கும் வாழ்க்கைச் சுமைஅதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமை நாட்டு மக்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் தளர்த்தி உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த வரி மின்சாரக் கட்டணங்களில் நேரடித் தாக்கத்தைச் செலுத்துகின்றது. வாழ்க்கைச் செலவையும் அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

