செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் மூன்றாம் பகுதி பணிகள் இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு சிறுவர்களுக்குரிய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீதிமன்ற அனுமதியுடன் 56 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வின் 33ஆவ…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் மூன்றாம் பகுதி பணிகள் இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு சிறுவர்களுக்குரிய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதியுடன் 56 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வின் 33ஆவது நாள் பணிகள் இன்று இடம்பெற்றன.

இன்றைய அகழாய்வின் போது, இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூடுகளுடன் இரண்டு எலும்புக்கூட்டு குவியல்களும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 87 நாட்கள் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 414 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.