யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (18) 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்பு கூடு உள்ளடங்கலாக 06 என்பு கூ…
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (18) 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்பு கூடு உள்ளடங்கலாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

