செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியின்படி 56 நாட்கள் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில்,…
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் அனுமதியின்படி 56 நாட்கள் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில், இன்றைய அகழ்வில் ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் அடங்கிய மொத்தம் ஆறு மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த மனித என்புக்கூடுகளில் ஐந்து என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகளின் போது வெள்ளை நிற பாசிமணி, இரும்புத் துண்டு மற்றும் வளையல் உள்ளிட்ட பொருட்களும் சான்றுகளாக மீட்கப்பட்டுள்ளன.
இதனுடன், மேலும் மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வித்தியாசமான நிலையில் காணப்பட்ட ஒரு மண்டையோட்டை சுத்தம் செய்து ஆய்வுக்குத் தயார்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மொத்தம் 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 437 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 428 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

