செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் மனித என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்…
செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் மனித என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுக்குழு எதிர்வரும் 22ஆம் திகதி சம்பவ இடத்திற்குச் செல்லவுள்ளது.
செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த பயணத்திற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தூதுக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 437 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 428 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழ்வின்போது ஆபரணங்கள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

