முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.நாட்டின் 35 ஆவது பொலிஸ் மாஅதிபராகப் பணியாற்றிய அவர், கடந்த 17 ஆம் திகதி…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.நாட்டின் 35 ஆவது பொலிஸ் மாஅதிபராகப் பணியாற்றிய அவர், கடந்த 17 ஆம் திகதி காலை தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்திருந்தார்.அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் பொலிஸ் மரியாதையுடன் நாளை (20) நடைபெறவுள்ளன.