இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று(20.07.2026) இடம்பெற்றுள்ளன. இதற்கமைய, பல அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்த நிலையில், முன்னாள் பொலிஸ்…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று(20.07.2026) இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய, பல அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்த நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர் நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர் என்றும் அவரது சாதனைகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கை பொலிஸ் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

