டி.கே.பி.கபில 79 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்த வெளிநாட்டுப் பயணிகள் இருவர், ஞாயிற்றுக்கிழமை (19) அன்று அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொரு…
டி.கே.பி.கபில
79 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்த வெளிநாட்டுப் பயணிகள் இருவர், ஞாயிற்றுக்கிழமை (19) அன்று அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் ஆவர். அங்குள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இந்த சிகரெட் தொகையை கம்போடியாவில் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக ‘எயார் ஏசியா’ (Air Asia) விமான சேவைக்குச் சொந்தமான ‘ஏ.கே. 047’ (AK-047) எனும் விமானத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளைச் சோதனை செய்தபோது, சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 266 பெட்டிகள் (மொத்தம் 53,200 சிகரெட்டுகள்) மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
தற்போது சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்வரும் 21.07.2026 அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

