சீனாவில் மேய்சாக் சூறாவளியால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விலங்குகளால் மக்கள் அச்சம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join சீனாவின் ஹெங்ஜோ பிராந்தியத்தை தாக்கிய மேய்சாக் சூறாவளி மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் கார…

சீனாவில் மேய்சாக் சூறாவளியால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விலங்குகளால் மக்கள் அச்சம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

சீனாவின் ஹெங்ஜோ பிராந்தியத்தை தாக்கிய மேய்சாக் சூறாவளி மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெள்ளம் காரணமாக, அந்த பகுதியில் உள்ள பாம்பு பண்ணையொன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் வெளியேறியுள்ளதாக சி.என்.என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை அதிக நச்சுத்தன்மை கொண்டவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பண்ணையிலிருந்து தப்பிய பாம்பு கடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பாம்பு கடிக்கிற்கு இலக்காகியுள்ளதாகவும் அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பாம்புகளிடமிருந்து விலகி இருக்குமாறு கிராம மக்களுக்கு சீன அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாம்புகள் மட்டுமன்றி, இந்த பகுதியிலுள்ள குய்காங் உயிரியல் பூங்காவிலும் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்த இரண்டு வரிக்குதிரைகள், மூன்று குதிரைகள், இரண்டு கழுதைகள் உள்ளிட்ட பல விலங்குகள் தப்பிச் சென்றுள்ளன.

தப்பிச் சென்ற தீக்கோழிகள் மற்றும் பறவைகள் போன்ற விலங்குகள் பயப்படும்போது வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால், அவற்றை கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பூங்கா நிர்வாகம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

வெள்ள நீர் உயர்ந்தபோது, அபாயகரமான விலங்குகளின் கூண்டுகளைப் பூட்டுவதற்குப் பூங்கா ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடியதாக பூங்கா உரிமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், துரதிர்ஷ்டவசமாக மூன்று சிங்கங்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சீன ‘ஷான்யு’ செய்திகள் தெரிவிக்கின்றன.