குஜராத் மாநிலம் பவாநகர் மாவட்டத்தில் உள்ள வேலவடார் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கர்ஜியா கிராமத்தைச் சேர்ந்தவர் பொஹ்பாய் பர்மர். இவர் திங்கட்கிழமை (06) காலை தனது கால்நடைகளை வனப்பகுதிக்கு அருகே மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு வந்த சிங்கம் ஒன்று, கால்நடைகளை விட்ட…
குஜராத் மாநிலம் பவாநகர் மாவட்டத்தில் உள்ள வேலவடார் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கர்ஜியா கிராமத்தைச் சேர்ந்தவர் பொஹ்பாய் பர்மர். இவர் திங்கட்கிழமை (06) காலை தனது கால்நடைகளை வனப்பகுதிக்கு அருகே மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு வந்த சிங்கம் ஒன்று, கால்நடைகளை விட்டுவிட்டு பர்மரைத் தாக்கியது. சிங்கத்தின் பிடியில் சிக்கிய பர்மரின் தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கிராமத்தினர் கூச்சலிட்டுச் சிங்கத்தை விரட்ட முயன்றும், அது அவரை விடாமல் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து தாக்கியது. உயிர் பிழைக்க வேறு வழியின்றி, பர்மர் எந்தவித எதிர்வினையுமின்றி தரையில் படுத்துக் கிடந்தார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிங்கம் வனப்பகுதிக்குள் சென்றது. உடனடியாகக் கிராமத்தினர் பர்மரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்; அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

