சிறை கலவரம்: அரசிடம் முஜிபுர் கேள்வி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுக்க முடிந்திருந்தும், உரிய நேரத்தில் உத்தரவு வழங்கப்படாததால் நிலைமை மோசமடைந்ததாக எதிர்க்கட்சி நாடாளும…

சிறை கலவரம்: அரசிடம் முஜிபுர் கேள்வி

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுக்க முடிந்திருந்தும், உரிய நேரத்தில் உத்தரவு வழங்கப்படாததால் நிலைமை மோசமடைந்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று (08) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவர், “உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் சம்பவத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும். கைதிகளும் மனிதர்கள்தான்” என்று தெரிவித்திருந்ததை மேற்கோள்காட்டினார்.

எளிதில் தடுக்கக்கூடிய சம்பவம் மோதலாக மாறிய பின்னரே கட்டுப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காதது யார்? உரிய உத்தரவை வழங்கத் தவறியது யார்? என்ற கேள்வியை அரசிடம் முன்வைத்தார்.

இலங்கையின் பல சிறைச்சாலைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன என்றும், இது முதல் சம்பவமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் தொடர்பாக அரசின் தேசியக் கொள்கையிலேயே தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 2024ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினை குறித்து நீதி அமைச்சருக்கு அறிவிருந்தும் ஏன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.