இலங்கையில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற சம்பவமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 இற்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் அறியக்கிடைத்துள்ளன. இவ்வாறு காயமடைந்த பொலிஸார் மற்றும் கைதிகள் கொழும்பு வைத்தியசாலை…

இலங்கையில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற சம்பவமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 இற்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் அறியக்கிடைத்துள்ளன.

இவ்வாறு காயமடைந்த பொலிஸார் மற்றும் கைதிகள் கொழும்பு வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலைக்குள் இருக்கின்ற குறிப்பிட்ட சிலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இதனை அறிந்திருந்த இன்னுமொரு தரப்பினர் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் சாட்சியுடன் சொல்ல முற்பட்டிருந்தமையை அடுத்தே இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நேற்றைய தினம்(07.07.2026) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விசேட ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்ட பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க இந்த விவகாரம் தொடர்பில் பல முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தெளிவுபடுத்தியிருந்த விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியின் ஊடாக பார்க்கலாம்...