தற்போது தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது, அநுர அரசால் தான் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக தான் என்றும், வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “களம்”…
தற்போது தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது, அநுர அரசால் தான் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக தான் என்றும், வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“களம்” நிகழ்ச்சிக்கு ஒன்லைன் வழியாக இணைந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போராட்டங்கள் செய்து, ஆட்சியை பிடித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 22 மாதங்களாகியும் இதுவரையில் தமிழ் மக்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை.இதனை நாங்கள், சுமாராக 30 மாதங்களுக்கு பின்னர் தட்டிக்கேட்போம்.
மாறாக, நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, மேடை அமைத்தோம், இதுவொரு கூட்டு முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
மக்களுக்காக நாங்கள் கேட்கும் மாகாண சபை தேர்தல், காணி விடுவிப்பு போன்ற விடயங்களை அரசாங்கம் கருத்திற் கொள்ளாவிட்டால் 30 மாதங்களுக்கு பின், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.
அநுர அரசாங்கத்தில் நடக்கும் மோசடிகளையும், நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் இயங்கும் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கையும் களம் நிகழ்ச்சி இன்னும் ஆழமாக ஆராய்கிறது...

