நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் இன்று( 9) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மோதலில் உயிரிழந்த இந்திய நாட்டவரை அடையாளம் காணும் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இர…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் இன்று( 9) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த மோதலில் உயிரிழந்த இந்திய நாட்டவரை அடையாளம் காணும் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.கைதிகளின் உறவினர்கள் அமைதியின்மை இத்தகைய பின்னணியில், கைதிகளின் உறவினர்களும் நேற்று தினமும் சிறைச்சாலைக்கு முன்பாக வந்து அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சிறை அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து அவர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதன்போது, பெண் கைதிகள் குழுவினர் சிறை அறைகளிலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,பொலிஸார் தலையிட்டு, கைதிகளை மீண்டும் அவர்களின் அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இதயைடுத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஒரு பெண் கைதிகள் குழுவை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
இந்த மோதல் சூழலை தொடர்ந்து, 700க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

