நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரமானது தற்செயலானது அல்ல என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிலிருக்கும் பசில் ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று கு…

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரமானது தற்செயலானது அல்ல என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவிலிருக்கும் பசில் ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவிற்கு தற்போது பிடியாணைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அதனை திசைமாற்றுவதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நீதியமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த கால ஆட்சிகளில் சிறைச்சாலைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களுக்குப் பேச அருகதை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் நீதியமைச்சரை பதவிவிலக்கினால் உயிரிழந்தவர்கள் மீண்டும் வருவார்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தவியடங்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..