நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "சிறைச்சாலை வார்டுகளில் நூற்றுக்கணக்கான கைதிகள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று.  நானும் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைகளில் கைதியாக இருந்தவன் என்ற அடிப்படையில், அங்குள்ள ஆபத்தான சூழல்களை நன்கு அறிவேன்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்றும் உள்ளன.

சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்பது ஒரு தரப்பினரின் வாதமாக இருந்தாலும், அங்குள்ள அடிப்படை சூழல் குறித்து இருவேறு கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகின்றன. இதேவேளை, சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சரின் முடிவை மனதாரப் பாராட்டுகின்றேன்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பாரிய பேரழிவுகளுக்குக் கூட பொறுப்பானவர்கள் எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. அத்தகைய சூழலில், இந்தச் சம்பவத்துக்குத் தான் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் தைரியமாக முன்வந்தமை போற்றத்தக்கது. வெளிநாடுகளில் அசம்பாவிதங்களுக்குத் தலைவர்கள் பொறுப்பேற்பதைப் போலவே, உள்நாட்டிலும் நீதி அமைச்சர் காட்டிய இந்தத் துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன்" என்றார்.