நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் இடம்பெற்ற ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் நடப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பொறுப்பானவர்கள் உரிய முடிவுகளை…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் இடம்பெற்ற ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் நடப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பொறுப்பானவர்கள் உரிய முடிவுகளை எடுக்கத் தவறியமையே இந்த நிலைக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிர்வாகச் செயலிழப்பு மற்றும் பலவீனமான முகாமைத்துவம் ஆகியவற்றை இதற்கு முன்னரும் இந்நாட்டு விவசாயிகளும் வர்த்தகர்களும் அனுபவித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.விரிவான மற்றும் முறையான விசாரணைநீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த 06 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிதல், எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியவை இந்தக் குழுவின் முக்கிய பணிகளாகும். நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து, ஜனாதிபதியின் செயலாளரால் இந்த விசேட விசாரணைக் குழு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.