நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் வன்முறை சம்பவத்தினால் சிறைச்சாலைக்கு 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீர்க…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் வன்முறை சம்பவத்தினால் சிறைச்சாலைக்கு 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரிடம் தற்போது இந்த விசாரணைகள் உள்ள நிலையில் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் திலின தம்சித் ஹெட்டியாராச்சிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக அறிக்கைகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகரவின் அறிவுறுத்தலுக்கு அமைய, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கை மற்றும் கோரிக்கையை கருத்திற்கொண்டே பிரதம நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125 ஆம் பிரிவிற்கமைய, இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்ட பணிப்புரையைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொலிஸ் மா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகரவின் நேரடி மேற்பார்வையில் இனிவரும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த வன்முறை சம்பவத்தினால் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உயிரிழந்ததுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

