இலங்கையின் சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மாத்திரை மட்டுமே வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட…
இலங்கையின் சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மாத்திரை மட்டுமே வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நான் யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும்போது என் கண்முன்னே மூன்று கைதிகள் உயிரிழந்தனர். மருந்துகள் இல்லை
சிறைச்சாலையில் எல்லா நோய்க்கும் பனடோல் மாத்திரமே வழங்கப்படுகின்றது.அதை தவிரே வேறு மருந்துகள் இல்லை.
அதேபோல் சிறைச்சாலையில் மருத்துவர்கள் எவரும் இருப்பதில்லை. மாரடைப்பு ஏற்பட்டால் கூட அவசர சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் கடமையில் இப்பதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்தும் குற்றம்சாட்டியுள்ளார்.

