நீர் கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு தினங்களாக இடம் பெற்ற வன்முறை சம்பவங்களை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு சென்ற ஒருவர் விடுதலை ஆகாது சவப்பெட்டியில் வீடு…

நீர் கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு தினங்களாக இடம் பெற்ற வன்முறை சம்பவங்களை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு சென்ற ஒருவர் விடுதலை ஆகாது சவப்பெட்டியில் வீடு திரும்புவார் என அவரது உறவினர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கடமைக்கு திரும்பிய ஒருவர் சடலமாக வீடு திரும்ப நேரிடும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைதிகள் அல்லது சிறைச்சாலை அதிகாரிகள் யாராக இருந்தாலும் இந்த சம்பவம் மாபெரும் துயரமான அனுபவம் என அவர் தெரிவித்துள்ளார்.நிராயுதபாணிகளான இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளை மீட்கச் சென்ற போது பல சிறைச்சாலை அதிகாரிகள் கொடூருமான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பாரதூரமான துன்பியல் அனுபவத்தை அரசாங்கம் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.